சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர்.
இவர் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று அண்ணாத்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக வெளியானது, இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று ரஜினி தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அனைத்து முக்கிய பிரமுகர்களும் பதிவிட்டு இருந்தனர்.
இதனிடையே இன்று ரஜினி அவரின் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தையான ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட அவரின் ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri