இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?
விஜய்யின் லியோ
கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் தான் வரும் செப்டம்பர் 30ம் தேதி விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பு குழு தரப்பில் கூறப்பட்டது.
காரணம் போலியான டிக்கெட் விற்பனை, அதிக டிக்கெட் பிரச்சனை, அரசியல் தலையீடு என நிறைய காரணங்கள் சமூக வலைதளங்களில் சுற்றுகின்றன.

புதிய தகவல்
தளபதியை நேரில் பார்க்க, அவரது குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள், ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்தி அவர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. அதாவது விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri