விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது, எங்கே?... போலீஸிடம் அனுமதி கேட்டுள்ள புஸ்ஸி ஆனந்த்
நடிகர் விஜய்
அடுத்தடுத்த படங்கள், அதிகமான சம்பளம், அதைவிட சினிமா மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் என சினிமா பயணத்தில் விஜய் சம்பாதித்த விஷயங்கள் ஏராளம்.
அவர் தொடர்ந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் சினிமாவை விட்டு போகப்போகிறேன் என்று கூறி ரசிகர்கள் அனைவருக்குமே ஷாக் கொடுத்தார்.
கோட் படத்தை தொடர்ந்து இன்னொரு படம் நடிப்பாராம், அதோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார்.
மாநாடு
எப்போதோ தனது கட்சிப் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தவர் அண்மையில் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். இந்த நிலையில் நடிகர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாம்.
இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி விழுப்புரம் ஏ.எஸ்.பி யிடம் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.
விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Super Singer: ஈழத்து குயில் பிரியங்ஹாவின் தெரிக்கவிடும் குரல்... நடனத்தில் கலக்கிய குட்டீஸ் Manithan
