SuperGirl திரை விமர்சனம்

Report

ஹாலிவுட்டின் தலதளபதி போல் அடித்துக்கொள்ளும் மார்வல், டிசி தயாரிப்புகள் அடுத்தடுத்து படங்களை வெளியிட அதில் டிசி தயாரிப்பான சூப்பர்மேன் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள சூப்பர்கேர்ள் படம் எப்படி? என்பதை பார்ப்போம்.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

கதைக்களம்

சூப்பர் கேர்ள் ஆக வரும் காரா(மில்லி அலோக்) எப்போதும் குடி, தண்ணி, போதை என ஒவ்வொரு கிரகமாக சென்று வாழ்க்கையை கழித்து வருகிறார், அப்போது ஒரு கிரகத்தில் இவரின் சூப்பர் பவர் வேலை செய்யாது.

அங்கு க்ரம் என்பவன் ஒரு குடும்பத்தையே கொன்று அவர்கள் ஆயுதத்தை எடுத்து செல்கிறான், அதில் அந்த குடுபத்தில் இருக்கும் ஒரு சிறுமி மட்டும் தப்பித்து க்ரம்-யை கொல்ல வேண்டும் என கங்கனம் கட்டுகிறார்.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

அந்த நேரத்தில் அந்த க்ரம் சூப்பர் கேர்ள் வாகனத்தை திருடியதும் மட்டுமில்லாமல், செல்ல நாயான கிரிப்டோவையும் விஷ மருந்தால் சுட்டு தப்பிகிறான். இதனால் கிரிப்டோ கவலைகிடம் ஆகிறது.

இப்பொழுது சூப்பர் கேர்ள் அந்த விஷத்தின் மாற்று மருந்து க்ரம்-டம் இருப்பதை அறிந்து அவனை தேடி செல்ல, சூப்பர் கேர்ளுடன் க்ரம்-யை கொல்ல் அந்த சிறுமியும் வர, இவர்களின் திட்டம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

படத்தை பற்றிய அலசல்

சூப்பர் கேர்ள் ஆக நடித்துள்ள மில்லி அலோக், ஆரம்பத்தில் போதை, தண்ணி என அப்படியே நம்ம மாஸ்டர் JD போல் நா வைப்பது தான் சட்டம் என ஜாலியாக வாழ்ந்தாலும், தன் கிரிப்டோகாக வெகுண்டு கிளம்பி அடித்து தும்சம் செய்தும் சரி தன்னுடன் வரும் சிறுமி எந்த காரணத்தினாலும் கொலைக்காரி ஆககூடாது என போராடும் போது சரி கலக்கியுள்ளார்.

படத்தின் வில்லன் க்ரம் ஆக நடித்துள்ள மேத்தீஸ் மிரட்டியுள்ளார், அளவான பேச்சு. கருணையே இல்லாத குணம் என அவர் பங்கையும் சிறப்பாக செய்துள்ளார், அதோடு ஜாசன் மோமா சிறப்பு கேமியோவில் கலக்கியுள்ளார்.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

அங்கீகாரம்: திரை விமர்சனம்

அங்கீகாரம்: திரை விமர்சனம்

சூப்பர் கேர்ள் படம் ஆரம்பத்திலிருந்தே ஒரு நிதானமாகவே திரைக்கதை நகர்கிறது. கிரிப்டோ-விற்கு பிரச்சனை என்றதும் காரா கிளம்பும் இடம் தான் படம் சூடுபிடிக்கும் என நினைத்தால், அங்கு தான் பிரச்சனை. படம் அதன் பிறகும் எந்த ஒரு திருப்பம், ஆச்சரியம் என எதையும் நிகழ்த்தவில்லை, கதை சூடுபிடித்த இடத்திலிருந்து கூட மிக மந்தமாகவே நகர்கிறது திரைக்கதை.

ஜேசன் மாமோ கேமியோ வந்தவுடன் வரும் ஆக்‌ஷன் காட்சி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது, பட்ஜெட் பிரச்சனையா என்ன என்று தெரியவில்லை, பல ஆக்‌ஷன் காட்சிகள் தூள் பறக்க வேண்டிய இடத்தில் கூட, பெரிய அதிசியம் எதுவும் நிகழ்த்தவில்லை.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

படத்தின் மிகப்பெரிய பலம் காரா-ரூத்தி இரண்டு பேருக்குமான உரையாடல், காட்சிகள் சிறப்பு, அதோடு கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எதிர்பார்த்த அளவுக்கு பிரமாண்டம் இல்லை என்றாலும் ஆறுதல் தான்.

டெக்னிக்கலாக பின்னணி இசை, ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் எல்லாமே ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் டீசண்ட் ஒர்க், மேலும் சூப்பர் மேன் கேமியோ எந்த மேஜிக்கும் நிகழ்த்தவில்லை.

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

க்ளாப்ஸ்

சூப்பர் கேர்ள், ரூத்தி சிறுமி, க்ரம் வில்லன் பெர்ப்பாமன்ஸ்

ஜேசன் மாமோ கேமியோ

கிளைமேக்ஸ் சண்டைகாட்சி

பல்ப்ஸ்

மிக மந்தமாக நகரும் திரைக்கதை

எந்த ஒரு எக்ஸேட்மெண்ட்-யும் தரவில்லை

மொத்தத்தில் சூப்பர் கேர்ள் சாகசம் குறைவு, பேச்சுவார்த்தையே அதிகம் 

SuperGirl திரை விமர்சனம் | Supergirl Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US