சூப்பர் ஹிட்டாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஜிகர்தண்டா முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
இப்படம் வெளிவந்து கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் இன்றும் நம் மனதில் தனி இடத்தை ஜிகர்தண்டா முதல் பாகம் பிடித்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இதே கதைக்கருவில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். முதல் பாகத்தை எந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டதோ, அதே அளவிற்கு ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலக அளவில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
சூப்பர் ஹிட் வசூல்
இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ. 54 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தீபாவளி விருந்தாக வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மக்களின் பேராதரவு காரணமாக சூப்பர்ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri