முதல் நாள் சூப்பர்மேன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சூப்பர்மேன்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் ரசிக்க வைக்கும் திரைப்படம் சூப்பர்மேன்.
இயக்குநர் James Gunn இயக்கத்தில் உருவான இப்படத்தில் David Corenswet, Rachel Brosnahan, Nicholas Hoult உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும் கூட, வசூலில் முதல் நாள் பட்டையை கிளப்பியுள்ளது சூப்பர்மேன்.
வசூல் விவரம்
இந்த நிலையில், முதல் நாள் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்று திரையரங்கில் வெளிவந்த சூப்பர்மேன் திரைப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது.

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
