சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 74ஆம் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், அடுத்ததாக கூலி தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள். திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. சூப்பர்ஸ்டாருக்கு சொந்தமாக சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 35 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இவருடைய சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
