வேட்டையன் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்ததா? எவ்வளவு தெரியுமா, இதோ
வேட்டையன்
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
TJ ஞானவேல் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடிக்க அவருடன் இணைந்து பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முதல் முறையாக ரஜினி படத்தில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படம் வெளிவந்து 17 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லாபம்
வேட்டையன் படத்தின் பட்ஜெட் ரூ. 225 ஆகுமாம். இதில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் பிசினஸ் மூலம் ரூ. 223 கோடி வரை வேட்டையன் வசூல் செய்துள்ளது.
ரிலீஸுக்கு பின் இப்படம் உலகளவில் செய்த வசூலின் அடிப்படையில் ரூ. 90 கோடி வரை தயாரிப்பாளருக்கு நிகர லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
