வேட்டையன் படத்தின் கதை இதுதானா.. தரமான சம்பவம் காத்திருக்கு
வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், விஜே ரக்ஷன், அபிராமி என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
வேட்டையன் படத்தின் கதை
இந்த நிலையில், வேட்டையன் படத்தின் கதைக்களம் இதுதான் என கூறி தகவல் ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினி ஒரு மர்டர் கேஸ்ல இருக்க ஆள் ஒருவரை சுட்டு விடுகிறார். ஆனால் அதுக்கப்றம் தான் தெரிய வருகிறது அது ஏதோ தப்பான விஷயம் என்று. தன் தப்பை உணர்ந்து இங்க இருக்க பெரிய ஆளுங்கள எதிர்த்து, அதுக்கு நீதி வாங்கி தர போராட்டம் தான் வேட்டையன் படத்தின் கதை என தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படியொரு கதைக்களத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் கண்டிப்பாக அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
