சூப்பர்ஸ்டார் பட்டம் வேஸ்ட்.. எந்த பிரயோஜனமும் இல்லை! - தனுஷ் பட நடிகை பேச்சால் சர்ச்சை
பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. அவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. தற்போது அவர் சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி பேசி இருக்கும் விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது.
சூப்பர்ஸ்டார் பட்டம் வேஸ்ட்
"சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை. டைம் வேஸ்ட் தான். அந்த பட்டத்தால் பயன் அடைந்த யாராவது இருக்கிறார்களா. யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை."
"சூப்பர்ஸ்டார் என சொல்வதை விட சூப்பர் நடிகர் என்று சொல்வதை தான் விரும்புகிறேன். அந்த பட்டத்தை பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களுக்கு கொடுக்கலாம்" என பார்வதி கூறி இருக்கிறார்.
அவரது பேட்டி தற்போது சர்ச்சையாகி சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
