சூர்யாவை கவர்ந்த ரசிகர்களின் வைரல் வீடியோ! அவரே வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் சூர்யா நடித்து முடித்துள்ள பீம் ஜி திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது, இதன் போஸ்டர்களும் பெரிய வைரலானது.
இந்நிலையில் சூர்யா தற்போது அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் சிலர் அயன் படத்தின் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வைரல் வீடியோவை கண்ட சூர்யா "Loved It" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Loved it !!! ?????? https://t.co/qt3zqUtlCI
— Suriya Sivakumar (@Suriya_offl) July 25, 2021