மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்-விஜய் பட நடிகை
நடிகை சுரேகவாணி தெலுங்கு சினிமாவில் ஏராளாமான படங்களில் அம்மா ரோல்களில் நடித்து வருபவர். தமிழிலும் அவர் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
உத்தமபுத்திரன், மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். கடந்த 2019ல் சுரேகாவாணியின் கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார்.
தற்போது மகள் உடன் சுரேகாவாணி தொடர்ந்து மாடர்ன் உடைகளில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவரது மகளை ஹீரோயின் ஆக்கும்படி ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

மொட்டை தலையுடன் போட்டோ
தற்போது சுரேகா வாணி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் முடி இல்லாமல் வெளியிட்டு இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.