நானும் அபிஷேக்கும் ஒன்னா.. பிக் பாஸ் வீட்டில் கோபமான சுரேஷ் சக்ரவர்த்தி
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி எப்படிப்பட்டவர் என்பது பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லோருக்குமே தெரியும். அவர் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்குகிறேன் என சொல்லி கொளுத்தி போடுவார் அவர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எல்லோரும் பிரெஸ் மீட்டில் பேட்டி அளிப்பது போல டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் பேசிய சுரேஷ் சக்ரவர்த்தியை நிரூப் கடந்த சீசன் போட்டியாளர் அபிஷேக் உடன் ஒப்பிட்டு பேசினார்.
"சுவாரஸ்யத்திற்காக தன்னை தான் கொளுத்திக்கொள்வேன்" என அபிஷேக் கூறியது போல, சுரேஷ் தாத்தா தற்போது வீட்டில் கொளுத்திப்போட்டு கொண்டிருக்கிறார் என நிரூப் கேள்வி கேட்டார்.
அதற்க்கு பதில் சொன்ன சுரேஷ் சக்ரவர்த்தி, "என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள், யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். நான் சுயநலவாதி, என்னை கொளுத்திக்கொள்ள மாட்டேன், மற்றவர்களை தான் கொளுத்தி விடுவேன்" என தெரிவித்து உள்ளார்.