வெறும் 27 தியேட்டர்.. தமிழ் சினிமா செத்துப்போய் இருக்கிறது: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டாமான பதிவு
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது காட்டமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். அவர் தயாரித்த சல்லியர்கள் என்ற படம் ஜனவரி 1ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது, ஆனால் அதற்கு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ரிலீஸை நிறுத்திவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். படத்தை நாளை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனாலுய் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை. "
"இங்கிருக்கும் சங்கங்கள் சரியில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. எத்தனை சிறுபடங்கள் நசுக்கப்பட்டுள்ளது? முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்ய இயலவில்லை."

தமிழ் சினிமா செத்துப்போய்தான் இருக்கிறது
இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க இவர்கள் யார்?! திரையரங்கு கொடு. படம் ஓடலைன்னா தூக்கு. பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிக்க அவர்கள் படம் பார்த்தார்களா? இல்லையே! அப்படியிருக்கும்போது ஏன் திரையரங்கு தர மறுக்கவேண்டும்?
பெரிய படங்களில் காசு பார்த்துக் கொண்டு சிறு படங்களை நசுக்கி கொல்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் அவ்வளவுதான்.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி பதிவிட்டு இருக்கிறார்.
அனைவருக்கும் வணக்கம்...
— sureshkamatchi (@sureshkamatchi) January 1, 2026
எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை… pic.twitter.com/BMAHBppfo6