இப்படி இருந்தா எப்படி தொழில் செய்வது? சிம்புவின் மாநாடு தயாரிப்பாளர் காட்டமான பதிவு
மாநாடு படம் தற்போது 75 நாட்களை கடந்து இருக்கிறது. பெரிய படங்களே ஓரிரு வாரத்தில் தியேட்டரில் இருந்து நடையை கட்டும் இந்த காலத்தில் மாநாடு படம் 75 நாள் மைல்கல்லை கடந்து இருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அதிர்ச்சி விஷயத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 75 நாள் ஆகியும் விநியோகஸ்தர்கள் இன்னும் கணக்கு ஒப்படைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
"75வது நாள் மாநாடு. ரோகிணியின் கோலாகலம் காண்கிறது. 75 நாள் ஆகியும் இன்னும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா.. மற்ற படங்கள் நிலையை என்ன சொல்ல?? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய?"
"நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
#maanaadu75days pic.twitter.com/m6A1Z4XMLF
— sureshkamatchi (@sureshkamatchi) February 5, 2022