மொத்தமாக சூர்யாவின் 24 திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?
24 படத்தின் ஒட்டுமொத்த வசூல்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 24.
முதல்முறையாக Sci-Fi திரைப்படத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.
இரட்டை வேடங்களில் சூர்யா ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தியிருந்தார், குறிப்பாக சூர்யாவின் அத்ர்யா கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
விக்ரம் குமாரின் விறுவிறுப்பான கதையில், ரகுமானின் இசையில் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் உலகமுழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.
ஆம், அதன்படி 24 திரைப்படம் உலகமுழுவதும் ரூ.120+ கோடி வசூலை குவித்துள்ளது.
மேலும் இப்படம் வெளியாகி இன்றுடன் 6 வருடங்கள் ஆகியுள்ளதால், ரசிகர்கள் பலரும் இப்படம் குறித்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் இதை செய்தால் போதும் - பேட்டியில் மனமுடைந்து கண்கலங்கிய SAC...