சூர்யாவுக்கு ஜோடியான 30 வயது பாலிவுட் நடிகை! வெளியானது சூர்யா 42 நடிகர்களின் லீஸ்ட்..
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா, அவர் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்களில் கமிட் செய்து வைத்துள்ளார்.
மேலும் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, திடீரென படத்தை நிறுத்திவிட்டு சிவா இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
அதன்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யா 42 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை இரண்டு பாகமாக வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர்களின் லீஸ்ட்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பூஜையிலும் அப்படத்தில் கதாநாயகி கலந்து கொள்ளவில்லை, இதில் நடிக்கும் கதாநாயகி குறித்தும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
மேலும் இன்று சூர்யா 42 பட பூஜையின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் Description-ல் நடிகை திஷா பாட்னி நடிப்பதை குறிப்பிட்டுள்ளனர். அவருடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா