சூர்யா42 டைட்டில், ரிலீஸ் தேதி பற்றி வந்த அப்டேட்! மொத்தம் இத்தனை மொழிகளில் வருகிறதா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று கதை கொண்ட படத்தில் சூர்யா பல கெட்டப்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் சூர்யா 42 டைட்டில் ப்ரோமோ ஷூட்டிங் நடந்து முடிந்தது. அதனால் அது எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
தேதி அறிவிப்பு
இந்நிலையில் தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. Suriya 42 படம் மொத்தம் 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது என தெரிவித்து இருக்கின்றனர்.
சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை வரும் ஏப்ரல் 16ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவித்து இருக்கின்றனர்
தற்போது சூர்யா ரசிகர்கள் இதனால் அதிகம் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
A Mighty Valiant Saga in 10 Languages!!! 3D🔥
— Studio Green (@StudioGreen2) April 6, 2023
Most Expected #Suriya42 Title + Release Date Announcement on 16th April, Sunday, 9.05 am.
Warrior is coming to storm 🔥#Suriya42Title @Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations @kegvraja @ThisIsDSP pic.twitter.com/uzj07LG1hR
போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா