டாப் நடிகர் நிராகரித்த கதையில் நடிக்கும் சூர்யா.. இதுதான் சூர்யா 44 படத்தின் கதையா

By Kathick Mar 31, 2024 03:00 AM GMT
Report

சூர்யா 44

சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படமும் வெளிவரவுள்ளது.

சூர்யாவின் 44வது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளிவந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது. கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கிறார்.

டாப் நடிகர் நிராகரித்த கதையில் நடிக்கும் சூர்யா.. இதுதான் சூர்யா 44 படத்தின் கதையா | Suriya 44 Movie Story Rejected By Top Actor

60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை.. காரணம் ரூ. 1500 கோடி சொத்து தானா

60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை.. காரணம் ரூ. 1500 கோடி சொத்து தானா

கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் வேறு யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.

நிராகரித்த டாப் நடிகர்

இந்த நிலையில், சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்ராஜ் நடிக்கவிருக்கும் படத்தின் கதையை முதலில் அவர் கூறியது நடிகர் விஜய்க்கு தானாம். முழு கதையையும் விஜய்க்கு கூறிய நிலையில், அவர் இந்த கதையில் நடிக்க நிராகரித்து விட்டார் என்பது போல் கூறப்படுகிறது.

டாப் நடிகர் நிராகரித்த கதையில் நடிக்கும் சூர்யா.. இதுதான் சூர்யா 44 படத்தின் கதையா | Suriya 44 Movie Story Rejected By Top Actor

அந்த கதையை தான் தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே செய்துள்ளாராம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கார்த்திக் சுப்ராஜ் கேங்ஸ்டர் படங்களில் இருந்து எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US