சூர்யா 44 படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்!! நடிகர் அதர்வா தர மறுத்த விஷயம்.. என்ன பாருங்க
சூர்யா 44
சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் கங்குவா. இப்படம் வெளிவந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறாமல் தோல்வி அடைந்தது.
அடுத்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதே நேரத்தில் சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது சூர்யா 44 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்ற நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகின்றது.
என்ன பாருங்க
இந்நிலையில், சூர்யா 44 படத்தின் டைட்டில் விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வலம் வருகிறது. அதாவது, சூர்யா 44 படத்திற்கு "கல்ட்" என பெயர் வைக்க யோசித்துள்ளாராம் இயக்குனர்.
ஆனால், இந்த தலைப்பை நடிகர் அதர்வா, அவர் இயக்க போகும் படத்திற்காக பதிவு செய்துள்ளாராம். அதனால் படக்குழு அதர்வாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள்.
ஆனால், அதர்வா தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார்த்திக் சுப்புராஜ் தற்போது வேறொரு டைட்டிலை தேடி வருகிறாராம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
