சூர்யா 46 படத்தின் பூஜை.. சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜூ! வீடியோ இதோ
சூர்யா 46
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்திற்கு வேட்டை கருப்பு தான் தலைப்பு என கூறுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
பூஜை
இந்த நிலையில் சூர்யா 46 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. வருகிற 30ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
• EXCLUSIVE - @Suriya_offl - #MamithaBaiju - #VenkyAtluri - @SitharaEnts @vamsi84 | #Suriya46 💥 POOJA TODAY pic.twitter.com/JwZkoG5TLW
— Hari™ (@Hari_Socialist) May 19, 2025



