வெளிவந்தது சூர்யா 46 படத்தின் அதிரடி அப்டேட்.. கோடிகளில் விற்கப்பட்ட OTT உரிமம்!
சூர்யா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ வெளிவந்தது.
சும்மா மிரட்டலாக அமைந்திருந்த இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
அதிரடி அப்டேட்
இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் எதுவும் வெளிவராத நிலையில், தற்போது சூர்யா 46 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, சூர்யா 46 படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 85 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.