மீண்டும் இணையும் பிளாக்பஸ்டர் கூட்டணி.. மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. கிட்டதட்ட உலகளவில் இப்படம் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜித்து மாதவன் திரைப்படங்கள் நடிகர் சூர்யா கைவசம் தற்போது உள்ளன.
சூர்யா 48
இந்த நிலையில், சூர்யாவின் 48-வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன் ஜெய் பீம் திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தனர். அப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது.

இதன்பின் மீண்டும் சூர்யா - TJ ஞானவேல் சூர்யாவின் 48-வது திரைப்படத்திற்காக கைகோர்க்கப்போகிறார்கள். Hombale Flims நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The next chapter... #SuriyaXHombale
— Hombale Films (@hombalefilms) June 29, 2026
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts… pic.twitter.com/HoZOgQRbC7
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri