என் வருமானத்தில் தான் எல்லாம்.. நடிகர் சூர்யா எமோஷ்னல்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து, சூர்யா கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் சூர்யா அவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
எமோஷ்னல்
இந்நிலையில், அகரம் நிறுவனத்தின் புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " எனக்கு சொந்த வீடு கட்டும்போது இருந்த சந்தோஷத்தை விட தற்போது இந்த விழாவின் மூலம் மகிழ்ச்சி அதிகமாக உள்ளது.
முதலில், அகரத்தை பத்துக்கு பத்து அறையில் தான் தொடங்கினோம். தற்போது அது வளர்ந்து பல குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடம் படிப்புக்காக வந்த நன்கொடையில் வாங்கியது இல்லை. என் சொந்த வருமானத்தில் வாங்கிய ஒன்று" என்று கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
