50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா - வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..
கங்குவா - வேட்டையன்
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவரவிருந்தது. அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியானது.

இதனால் அப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அதே தேதியின் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளிவருவதாக அறிவித்தவுடன் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியானது.
சூர்யாவின் பேச்சு
இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. நேற்று கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா கங்குவா ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சூர்யா பேசியது : "ரஜினி சாரோட வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. நான் பிறக்கும் போதே சினிமாவிற்கு வந்த மூத்தவர் அவர். 50 வருடங்களாக சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். அதனால் ரஜினி சார் படம் ரிலீஸ் ஆகுறது தான் சரியா இருக்கும். கங்குவா ஒரு குழந்தை, அந்த குழந்தை வர்ற அன்னைக்கு தான் பிறந்தநாள். அன்று பண்டிகையாக படத்தை கொண்டாடுவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கு" என பேசினார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri