கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம்

By Karthick Raja May 12, 2026 05:30 AM GMT
Report

கருப்பு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம் | Suriya About Karuppu Movie First Half Second Half

இயக்குநராக மட்டுமின்றி வில்லனாகவும் இப்படத்தில் களமிறங்கியுள்ளார் பாலாஜி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போக, மே 14ஆம் தேதி ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டது.

படம் எப்படி இருக்கும்?

நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் ஆந்திராவில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா கருப்பு படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்பதை கூறினார்.

கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம் | Suriya About Karuppu Movie First Half Second Half

அவர் கூறியதாவது, "படத்தின் முதல் பாதி ஒரு அருமையான, உணர்வுபூர்வமான நீதிமன்ற நாடகமாக இருக்கும். ஆனால், இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க தியேட்டரிகள் மூவ்மென்ட்ஸ், மாஸ் மசாலா காட்சிகள், நகைச்சுவை என முழுமையான பொழுதுபோக்கு நிறைந்திருக்கும். படம் வெளியாவதற்கு முன் எங்களால் உங்களுக்கு அளிக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்" என கூறியுள்ளார்.

கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம் | Suriya About Karuppu Movie First Half Second Half

இதன்மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகிற 14ஆம் தேதி கருப்பு திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US