மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு பேச முடியாமல் அழுத நடிகர் சூர்யா- வீடியோவுடன் இதோ
கடந்த அக்டோபர் 29ம் தேதி சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதபடி ஒரு விஷயம் நடந்தது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
காலையில் கூட அவரது அண்ணாவின் படத்திற்கு டுவிட் செய்தாரா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் புலம்பினார்கள். அவரது இறுதி ஊர்வலத்திற்கு செல்ல முடியாத பிரபலங்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன், ராம் சரணை அடுத்து தற்போது நடிகர் சூர்யா, புனித் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்பு பத்திரிக்கையாளர்களிடம் நடிகர் சூர்யா பேசும்போது, புனித்தின் இறப்பை ஏற்க முடியாமல் கண்ணீருடன் அழுதபடி பேசுகிறார்.
புனித் மரணம் குறித்து சூர்யா பேசிய வீடியோ,
.@Suriya_offl anna paid his last respect to @PuneethRajkumar today! pic.twitter.com/d4LSH1oVRW
— Suriya Fans Club™ (@SuriyaFansClub) November 5, 2021