12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலைபோல் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
12 ஹீரோக்கள் நிராகரித்த கதை
இந்த நிலையில், 12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தில் சூர்யா நடித்து சூப்பர்ஹிட்டான கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இந்த கதையை 12 ஹீரோக்களிடம் கூறியுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ். அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட 12 ஹீரோக்கள் இந்த கதையை கேட்டு நிராகரித்துள்ளனர். அஜித் இந்த கதையை முதலில் ஒப்புக்கொண்டு நடிக்க துவங்கியுள்ளார். போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், அதன்பின் இப்படத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.
12 ஹீரோக்கள் இப்படத்தை நிராகரித்த நிலையில், இறுதியாக சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
