சிங்கம் 4ல் இணையும் சூர்யா - ஹரி கூட்டணி.. ரசிகர்கள் காத்திருக்கும் மாஸ் விருந்து
சிங்கம்
ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சிங்கம்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 என தொடர்ச்சியாக ஹரி - சூர்யா கூட்டணியில் படங்கள் வெளிவந்தன.

சிங்கம் 3 படத்திற்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் அப்படம் நின்றுபோய்விட்டது.
சிங்கம் 4
இந்நிலையில், தற்போது மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சிங்கம் 4 படத்திற்காக இவருவரும் மீண்டும் இணைகிறார்களாம்.
இப்படத்தின் கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும், சூர்யா தன்னுடைய கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு சிங்கம் 4 படத்தில் நடிக்கப்போகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்று.
பாகுபலி, கே.ஜி.எப்பை தட்டி தூக்க வரும் சங்கர்.. ஒன்றினையும் சூர்யா, யாஷ், ரன்வீர், ராம் சரண்
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu