மார்க் மட்டுமே முக்கியம் இல்லை.. மாணவர்களுக்கு பரிசு கொடுத்த சூர்யா பேச்சு

By Parthiban.A Jul 16, 2023 09:40 AM GMT
Report

பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் சமீபத்தில் விழா நடத்தி அவர்களுக்கு உதவி தொகை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா அவரது அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விழாவை நடத்தி இருக்கிறார்.

முதல் மார்க் எடுத்த மாணவர்களை தேர்வு செய்யாமல், அவர்கள் எந்த சூழ்நிலையில் படித்து இந்த மார்க் எடுத்து இருக்கிறார்கள் என பார்த்து தேர்வு செய்து உதவு செய்திருப்பதாக சூர்யா தெரிவித்து இருக்கிறார். 

“மார்க் மட்டுமே முக்கியம் இல்லை, கல்வி மூலமா வாழ்க்கைய படிங்க” என சூர்யா மாணவர்கள் மத்தியில் பேசி இருக்கிறார்.

மார்க் மட்டுமே முக்கியம் இல்லை.. மாணவர்களுக்கு பரிசு கொடுத்த சூர்யா பேச்சு | Suriya Agaram Event To Honor Students

செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா கூறியதாவது..

"கடந்த 44 வருடங்களாக சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலமாக +2ல் முதல் மார்க் வாங்கிய மாணவ மாணவிகளை கௌரவப்படுத்தும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சி இது. அப்பா 30 வருடங்களாக அவரது நண்பர்கள் மூலமாக இதை நடத்திக்கொண்டிருந்தார். தற்போது அகரம் இதை எடுத்து நடத்துகிறது."

"பின்தங்கிய கிராமங்களில், முதல் தலைமுறை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள்.. அவர்கள ஸ்டேட் 1st ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. எந்த சூழ்நிலையில் படித்து இந்த மார்க் வாங்கி இருக்கிறார்கள் என பார்த்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று பரிசு அளிக்கப்பட்டது."

மார்க் மட்டுமே முக்கியம் இல்லை.. மாணவர்களுக்கு பரிசு கொடுத்த சூர்யா பேச்சு | Suriya Agaram Event To Honor Students

"அகரம் அறக்கட்டளையில் விதை திட்டம் ஆரம்பித்து 14 வருடம் ஆகிவிட்டது. தற்போது 5200 மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்க்க முடிந்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் தமிழில் மட்டுமே படித்துவிட்டு வந்த முதல் தலைமுறை மாணவர்கள்."

"3 வருடங்களாக அரசு உடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் 1 லட்சம் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடிந்தது" என சூர்யா கூறி இருக்கிறார். 

 ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி? பீச்சில் எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார் பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US