வணங்கானுக்கு பதில் இன்னொரு படத்தை கையில் எடுக்கும் சூர்யா? மீண்டும் மாஸ் கூட்டணி
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார். இது வரலாற்று படம் என்பதால் அதில் சூர்யா அதிகம் மெனக்கெட்டு நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. அதில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடிக்க போகிறார் என்றும் தற்போது தகவல் வந்திருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது.
'வணங்கான்'
மேலும் பாலா உடன் சூர்யா கூட்டணி சேர்ந்து இருந்த வணங்கான் படம் முதல் கட்ட ஷூட்டிங் மட்டுமே முடிந்த நிலையில் அதில் இருந்து சூர்யா வெளியேறி இருக்கிறார்.
சூர்யாவுக்கு அந்த கதை செட் ஆகாது என பாலா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
மீண்டும் ஹரி உடன் கூட்டணி?
இதற்கு முன் சூர்யா ஹரி உடன் கூட்டணி சேர இருந்த அருவா படம் ட்ராப் ஆனது எல்லோருக்கும் நினைவிருக்கும். தற்போது சூர்யா அந்த ப்ரொஜெக்ட்டை கையில் எடுக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
சூர்யாவின் கெரியரில் பல வெற்றி படங்கள் கொடுத்த ஹரி உடன் மீண்டும் அவர் இணைய இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகரை அடித்த வாணி போஜன்..மேடையில் ஓப்பனாக கூறிய நடிகை

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
