சூர்யா - ஜோதிகா நடத்திய பார்ட்டியில் கோலிவுட் நடிகைகள்.. யார்யார் தெரியுமா?
சூர்யா - ஜோதிகா
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல கேலி கிண்டலுக்கு உட்பட்டு பிறகு, உழைப்பாலும், சினிமா மேல் உள்ள ஆசையாலும் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.
பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்றளவும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
போட்டோஸ்
இந்நிலையில், இந்த ஜோடி இணைந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.
இந்த பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.