மீண்டும் அண்ணன் சூர்யாவுடன் இணையும் தம்பி கார்த்தி.. இயக்குனர் யாருனு தெரியுமா
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள்.
இதில் தற்போது சூர்யா, பாண்டிராஜ் இயக்கி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார்.
அதே போல், நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, முத்தையா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணன், நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை சூர்யா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில், கார்த்தி இணைந்துகொள்வார் என தகவல் கூறப்படுகிறது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan