சூர்யாவுக்கு ஜோடியாகும் 18 வயது இளம் நடிகை ! அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?
பாலா - சூர்யா
இயக்குனர் பாலா அடுத்து நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு ஏதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் மீண்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளனர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசைமைக்கவுள்ள இப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி வரும் ஏப்ரல் முதல் வாரம் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கவுள்ளதாம், சூர்யாவின் 41வது திரைப்படமாக தயாராகும் இந்தப் படத்திற்காக மதுரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் இணையும் இளம் நடிகை
இந்நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாகவுள்ள இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளன. 18 வயதாகும் இந்த இளம் நடிகை பாலாவின் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வாழ்க்கை பற்றி பேச எனக்கு உரிமை இல்ல - நடிகர் ராகவா லாரன்ஸ்!