கேகே மறைவுக்கு சூர்யா உருக்கமான இரங்கல்! உங்கள் குரல் என்றும் நிலைத்திருக்கும்
பிரபல பாடகர் கே.கே நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில்பாடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து இருக்கிறார். தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் அதிக ஹிட் பாடல்களை பாடி இருக்கும் கேகே-வின் மரணம் தற்போது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாதுறை பிரபலங்கள் பலரும் கேகே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்களும் கேகே திடீர் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சூர்யா உருக்கமாக ட்விட்டரில் கேகே மறைவு பற்றி பதிவிட்டு இருக்கிறார். "உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். உயிரின் உயிரே மற்றும் பல.. #RIPKK" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Your voice will always remain in our hearts! #UyirinUyire and many more…! #RIPKK
— Suriya Sivakumar (@Suriya_offl) June 1, 2022