அமீருக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! சிங்கம் அமைதியாக இருப்பதால்..
நடிகர் கார்த்தியை ஹீரோவாக பருத்திவீரன் படத்தில் அறிமுகப்படுத்திய அமீர் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டி பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. ஒரு இயக்குனரை வேலை தெரியாதவன், பொய் கணக்கு எழுதி ஏமாற்றினார் என நக்கலான உடல்மொழியில் பேசியதை கண்டிப்பதாக சமுத்திரக்கனி தொடங்கி பாரதிராஜா வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பின்னால் நடிகர் சிவகுமாரும் அவரது பிள்ளைகளும் தான் இருக்கிறார்கள் என கரு.பழனியப்பன் புகார் கூறி இருந்தார். அதற்கு பிறகு தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஞானவேல்ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டார்.
"வருத்தம் தெரிவிக்கிற சீன் எல்லாம் இங்க செல்லாது. எப்படி எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்றை வாரி இறைசீங்களோ.. அதே பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்" என சமுத்திரக்கனி தற்போது கூறி இருக்கிறார்.

சூர்யா ரசிகர்கள் போஸ்டர்
இந்நிலையில் அமீர் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.
சூர்யாவை சிங்கம் என்றும் அமீரை ஆதரிப்பவர்கள் ஓநாய்கள் என்றும் குறிப்பிட்டு அந்த போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.
அந்த போஸ்டர் இதோ..
Cheap activity by Ameer & co? pic.twitter.com/Ua00nNtI8A
— NAMAKKAL SFC™ (@sfcNamakkal) November 30, 2023
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri