ரசிகரின் காலில் விழுந்த நடிகர் சூர்யா.. காரணம் இதுதான், வைரல் வீடியோ
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் #suriya42 படத்தில் நடித்து வருகிறார்.
#suriya42 மட்டுமின்றி வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் வைரல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது.
வைரல் வீடியோ
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நடனம் ஆட சில ரசிகர்கள் மேடைக்கு வந்தார்கள். அப்போது சூர்யாவை பக்கத்தில் பார்த்தவுடன் உடனடியாக சூர்யாவின் காலில் விழுந்தனர்.
தனது ரசிகன் தன் காலில் விழுந்த அடுத்த நொடியே தனது ரசிகனின் காலில் விழுந்தார் சூர்யா. இந்த வீடியோ அப்போது படுவைரலானது.
ரசிகனை மதிக்க தெரிந்த நடிகர் என்று கூறி அந்த வீடியோவை தற்போது மீண்டும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
pic.twitter.com/Qo4ocKyBjc
— ꜰ乂_ᴀᴀʀᴜ_ (@fxaaru) September 26, 2022
ரசிகனை மதிக்கும் ஒரே தலைவன் @Suriya_offl ♥️? >>>>>>#suriya42 #VaadiVaasal #vanangaan