சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க
சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. ரிலீசாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையிலும் அதிக தியேட்டர்களில் இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
வசூல் ஏற்கனவே ரூ.300 கோடியை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது. சூர்யா கெரியரில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த சூர்யாவுக்கு கருப்பு படம் ஒரு பெரிய பூஸ்ட் ஆக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசு
கருப்பு படம் பிரம்மாண்ட ஹிட்டாகி இருக்கும் நிலையில் அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜிகே விஷ்ணுவுக்கு நடிகர் சூர்யா ஒரு சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
மகேந்திராவின் பிஇ 6இ பேட்மேன் எடிஷன் காரை தான் அவர் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த காரின் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்காக நன்றி கூறியிருக்கும் ஜிகே விஷ்ணு "சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு" என தெரிவித்திருக்கிறார்.