RJ பாலாஜிக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த சூர்யா.. சண்டை என பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் பல வசூல் சாதனைகளை படைத்து, சூர்யாவின் கெரியரில் புது உச்சத்தை தொட்டு இருக்கிறது.
சமீபத்தில் கருப்பு படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் சாய் அபயங்கார் என முக்கிய டெக்னீஷியன்களுக்கு சூர்யா மகேந்திரா BE காரை கிப்ட் ஆக கொடுத்து இருந்தார்.
ஆனால் RJ பாலாஜிக்கு அவர் எந்த பரிசும் கொடுத்ததாக தகவல் வரவில்லை. அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் சண்டை என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

RJ பாலாஜிக்கு கார்
இந்நிலையில் RJ பாலாஜிக்கு ஒரு சொகுசு காரை சூர்யா கொடுத்து இருக்கறார். அதை வீடியோவாக RJ பாலாஜி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவர்களுக்குள் சண்டை என பரவிய தகவலுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
இன்னோவா ஹைக்ராஸ் காரை தான் சூர்யா வாங்கி கொடுத்துள்ளார். இந்த காரின் டாப் மாடல் விலை சுமார் 40 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
"இது தான் நாங்கள்.. ❤️❤️. முதல் நாளில் இருந்தே நீங்கள் என்னை நம்பினீர்கள். அந்த ஒரு நம்பிக்கை தான் கனவை நனவாக்கி இருக்கிறது. அந்த ஒரு ஆதரவு என் வாழ்க்கையில் புது பயணத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது."
"சூர்யா சார் மட்டும் இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. என் வாழ்க்கையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். லவ் யூ சார்" என RJ பாலாஜி பதிவிட்டு இருக்கிறார்.

