ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக சூர்யா செய்த செயல்..குவியும் பாராட்டு!
தமிழில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக OTT தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் மக்களின் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்று இந்திய அளவில் பேசப்படும் திரைப்படமாக மாறியிருக்கிறது.
1995-ம் ஆண்டின் போது இருளர் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடி வென்ற நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்த ஜெய் பீம் படம் வெளியானது.
முதல் அரசியல் கட்சி தலைவர்களிலிருந்து நீதி துறையை சேர்ந்தவர்கள் வரை பல்வேறு தரப்பினர்களாலும் இப்படம் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், படத்தில் காட்சிப்படுத்தியது போல நிஜ வாழ்வில் கணவனை இழந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்த ராஜாக்கண்ன் மனைவி பார்வதியம்மாளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து உதவி செய்வதாக நடிகர் சூரியா அண்மையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக செயல்படும் சூர்யாவிற்கு இணையத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.