6 மாதத்தில் 3 ரூ. 200 கோடி, சூர்யா படைத்த சாதனை

Report

Suriya gives three 200 Crore movies in 6 months: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா, கடந்த 6 மாதங்களில் மட்டுமே மூன்று ரூ. 200 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

சூர்யா

சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இந்த வருடம் சூர்யாவின் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு சூர்யாவின் கம்பேக் பற்றித்தான் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா முழுவதும் பேச்சு, அந்தளவிற்கு சூர்யா அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

6 மாதத்தில் 3 ரூ. 200 கோடி, சூர்யா படைத்த சாதனை | Suriya Gives Three 200 Crore Movies In 6 Months

வசூல் சாதனை

மே மாதம் கருப்பு தமிழகத்தையே அதிர வைத்து ரூ. 330 கோடிகள் வசூலை தாண்ட, அடுத்த 3 மாதத்தில் ஆகஸ்ட் மாதம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளிவந்து ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இதுவே போதும் என்று சூர்யா ரசிகர்கள் நினைத்த நிலையில், இல்ல இன்னும் முடியல என்பது போல் நவம்பர் மாதம் தீபாவளி விருந்தாக சீன் படம் திரைக்கு வந்து தற்போது ரூ. 200 கோடிகளை கடந்து மெகா ஹிட் ஆகியுள்ளது.

6 மாதத்தில் 3 ரூ. 200 கோடி, சூர்யா படைத்த சாதனை | Suriya Gives Three 200 Crore Movies In 6 Months

ஒரே வருடத்தில் 3 படங்கள் ரிலீஸாகி அந்த 3 படங்களும் மெகா ஹிட் ஆகி ரூ. 200 கோடி வசூலை கடப்பது சாதாரண விஷயமில்லை, கண்டிப்பாக சூர்யாவிற்கு இந்த வருடம் கோல்டன் இயர் தான் என்று சொல்ல வேண்டும். சூர்யாவின் வெற்றிபயணம் சூர்யா-48, ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கும் படத்திலும் தொடர வேண்டும் என்பதே தற்போது எல்லோரின் எதிர்பார்ப்பும்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US