விஜய் நிராகரித்த கதையில் தான் சூர்யா நடிக்கிறாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
சூர்யா
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா
அதன்படி, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தான் அடுத்ததாக சூர்யா நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், கங்குவா படத்தின் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆர்.ஜே. பாலாஜி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கவிருந்தார். அப்போது விஜய்க்கு ஒரு கதையை கூறியிருந்தார். ஆனால், அந்த சமயத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு சொன்ன கதையில் தான் தற்போது சூர்யாவை வைத்து இயக்க போகிறாராம் பாலாஜி.
மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
