10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் சூர்யா செய்து வரும் உதவி.. குவியும் பாராட்டுக்கள்
சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த வருடம் கங்குவா படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை,
இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக கஷ்டப்படும் மாணவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கிறார்.
செய்யும் உதவி
இந்நிலையில், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக சூர்யா செய்து வரும் உதவி குறித்து பிரபல சண்டை பயிற்சியாளரான ஸ்டண்ட் சில்வா முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், " ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கடந்து பத்து ஆண்டுகளாக இன்சூரன்ஸ் தொகை செலுத்தி வருகிறார் சூர்யா. வருடத்திற்கு பத்து லட்சம் கட்டுவார். இதுக்குறித்து வெளிப்படையாக அவர் எங்கும் சொன்னதில்லை" என்று தெரிவித்துள்ளார்.