ஆளே இல்லாத சூர்யா வீடு.. போலீஸ் பாதுகாப்பு எதற்கு? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். கங்குவா படத்தை நடித்து முடித்த அவர், அடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்கிறார்.
சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தியது. அதற்கு அடுத்த படத்திலும் எதிர்ப்பு தொடர்ந்தது.

ஆளே இல்லாத வீடு.. போலீஸ் பாதுகாப்பு
அச்சுறுத்தல் இருந்ததால் அப்போது சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
அதனால் ஆளே இல்லாத சூர்யா வீட்டுக்கு தினமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதற்காக சூர்யா எந்த பணமும் செலுத்தவில்லை என RTI மூலம் கண்டறியப்பட்டு இருப்பதால் நெட்டிசன்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.