ஜெய் பீம் படத்தில் சூர்யாவிற்கு முன் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?
நடிகர் சூர்யா நல்ல நல்ல படங்கள் கொடுத்து மக்களின் மனதில் பெரிய இடத்தில் உள்ளார்.
நிஜ சம்பவங்களை மையமாக கொண்டு சூர்யா நடிக்கும் படங்கள் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகின்றன. அப்படி சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெய் பீம்.
இந்த படம் பழங்குடியின மக்கள் பட்ட கஷ்டத்தை பற்றிய ஒரு உண்மை சம்பவத்தை பற்றிய கதை. இதில் ஒரு சமூகத்தினரை தாக்கும் வகையில் சில விஷயங்கள் இருக்கின்றன என வழக்கு தொடர்ந்து பிரச்சனை எல்லாம் செய்தார்கள்.
ஜெய் பீம் படத்தை மக்கள் கொண்டாட சூர்யாவும் சந்தோஷமாக கொண்டாடினார்.
இப்படத்தால் வந்த பிரச்சனைகளை நீதிமன்ற வாயிலாக சந்தித்து வந்தார், இப்போது அப்படியே பேச்சு நின்றுவிட்டது.
வெற்றிநடைபோட்ட இந்த ஜெய் பீம் படத்தில் முதலில் சூர்யாவிற்கு முன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க தான் படக்குழு நினைத்தார்களாம், ஆனால் அது நடக்கவில்லை.