டிரெண்டிங்கில் சூர்யா! அடிச்சு நொறுக்கிய சாதனை! சூப்பரான செய்தி! கொண்டாடும் ரசிகர்கள்!
நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து தற்போது நலமுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சூர்யாவின் 40 வது படத்திற்கான பட பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.
கடைசியாக சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை சுதா கே பிரசாத் இயக்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்ப்புக்கு நடுவிலும் படத்தை ஓடிடியில் வெளியிட்டனர். படமும் நல்ல விலைக்கு போனது.
சூர்யா விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது அவரின் இந்த வெற்றி.
இப்படல் வெளியாகி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் தற்போது #100DaysOfSooraraiPottru என டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.
படத்தயாரிப்பு நிறுவனமும் விரைவில் அப்டேட் வரும் என கூறியுள்ளது.
மேலும் 500 மில்லியன் பேர் சூரரை போற்று படத்தை ஸ்ட்ரீம் செய்து பார்த்துள்ளனர். இதனை ரசிகர்கள் #500MStreamsForSooraraiPottru என டேக் போட்டு கொண்டாடியுள்ளனர்.
Celebrating 100days of SP! Updates on the way...?????? #100DaysOfSooraraiPottru #SooraraiPottruOnPrime @Suriya_offl #SudhaKongara @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @2D_ENTPVTLTD @PrimeVideoIN @SonyMusicSouth
— Rajsekar Pandian (@rajsekarpandian) February 19, 2021
Breaking records and setting New milestones! #500MStreamsForSooraraiPottru?@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @SonyMusicSouth @primevideoIN pic.twitter.com/XPOzeoopWz
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 18, 2021