சூர்யா 49: பிளாக்பஸ்டர் இயக்குநருடன் முதல் முறையாக கைகோர்க்கும் நடிகர் சூர்யா
Suriya 49 Movie Update: நடிகர் சூர்யாவின் 49வது திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சூர்யா
நடிகர் சூர்யாவிற்கு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் 220+ கோடி மற்றும் சீன் 4 நாட்களில் உலகளவில் ரூ. 150+ கோடி என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு தேடி தந்துள்ளன.

சூர்யா - ஞானவேல்
மூன்று வெற்றிகளை அடுத்ததாக நடிகர் சூர்யா TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 49
இந்த நிலையில், சூர்யாவின் 49-வது திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. இதில், இந்த ஆண்டு மண்டாடி பஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திதான் சூர்யாவின் 49-வது திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

பொறுப்பு துறப்பு: சூர்யா 49வது திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார் என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.