சூர்யா - ஜோதிகா இடையே பிரிவா?.. பதிலடி கொடுத்த அழகிய ஜோடி
சூர்யா
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல கேலி கிண்டலுக்கு உட்பட்டு பிறகு, உழைப்பாலும், சினிமா மேல் உள்ள ஆசையாலும் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.
பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். தற்போது, சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் நவம்பர் 14 - ம் தேதி கங்குவா படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்து இருந்தார்.
இடையே பிரிவா
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடித்தவுடனே அவரது காதல் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவை காண சென்றுள்ளார். இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக இணைந்து வந்துள்ளனர்.
அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக, இந்த காதல் ஜோடி குறித்து வரப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையே தற்போது, இவர்கள் இருவரையும் இணைத்து பார்ப்பதில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
