பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா மகள் தியாவின் +2 மதிப்பெண் இதுவா? உண்மையான தகவல்
சூர்யா-ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட மக்களாலும் இந்த ஜோடி கொண்டாடப்பட்டது.
இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்த போது அவர்களை தாண்டி ரசிகர்கள் தான் நிஜமாகவே சந்தோஷப்பட்டார்கள்.
காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
மகளின் மதிப்பெண்
இன்று +2 மதிப்பெண்கள் வெளியான நிலையில் சூர்யா-ஜோதிகா மகளின் மதிப்பெண் இது தான் என்று ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் இவர் தமிழில் 100க்கு 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு இவரின் மொத்த மதிப்பு 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும் எதோ மார்க் ஷீட்டே இவர்கள் பார்த்தது போல் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்த தகவல் உண்மை என்பது துளியும் இல்லை, அவர் வயதே 16 தான் ஆகிறது என்ற போது எப்படி 12ம் வகுப்பு தேர்வு எழுதிருக்க முடியும். இது முற்றிலும் பொய், இந்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
