மாஸாக வெளியான சூர்யாவின் கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல்.. எவ்வளவு தெரியுமா?
கங்குவா படம்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பலரின் கடின உழைப்பில் தயாராகி கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா.
சிறுத்தை சிவாவின் வித்தியாசமான இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பல கலைஞர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் பணியாற்றிய அனைவருமே கடின உழைப்பை போட்டுள்ளனர்.
ஆனால் படத்தை பார்த்து கலைஞர்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நல்ல விமர்சனம் கொடுக்காமல் சிலர் எப்படி விமர்சனம் கொடுப்பது என்று தெரியாமல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
படத்தை தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு எதிரான ஜோதிகா, அமலாபால் என நிறைய பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
படம் வெளியாகி 5 நாள் முடிவில் மொத்தமாக இதுவரை ரூ. 93 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
